குருந்தையடி முன்மாரி ரென்ஸ்ரார் விளையாட்டுக்கழகம் நடாத்தும் பெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி

(Uk batti)

மட்டக்களப்பு குருந்தையடி முன்மாரி ரென்ஸ்ரார் விளையாட்டுக்கழகம் தனது நான்காவது ஆண்டு நிறைவினைச் சிறப்பிக்குமுகமாக குருந்தையடி முன்மாரி பிரதேசப் பொதுமக்களின் ஆதரவுடன் மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியினை எதிர்வரும் செப்ரம்பர் மாதம் 20 மற்றும் 21 ஆந் திகதிகளில் ரென்ஸ்ரார் விளையாட்டுக்கழக மைதானத்தில் காலை 9.00 மணி முதல் நடாத்தத் தீர்மானித்துள்ளது.

அணிக்கு 9 பேர் கொண்ட கழகங்கள் பங்குபற்றும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இப்போட்டிகள் அனைத்தும் நொக் அவுட் முறையில் நடாத்தப்படவுள்ளதுடன் பங்குபற்ற விரும்பும் அணிகள் எதிர்வரும் 16 ஆந் திகதிக்கு முன்னர் போட்டிக்கட்டணமாக ரூபாய் 1,000.00 செலுத்தி முன்கூட்டியே பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், இப்போட்டிகளில் முதல் நான்கு இடங்களைப் பெறும் அணிகளுக்கு வெற்றிக்கிண்ணங்கள் வழங்கப்படவுள்ளதுடன் சிறந்த வீரர், கோல் காப்பாளருக்கான பரிசுகளும், பணப் பரிசுகளும் வழங்கப்படுமென ரென்ஸ்ரார் விளையாட்டுக்கழகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக தொடர்புகளுக்கு : 0778 5042 335, 077 5523 857, 077 8894 105