
(M.N.ரஞ்சன் )
மட்டகக்களப்பில் சுமார் 200 வருடங்களுக்கு மேலாக பழமை வாய்ந்த திருப்பெரும் துறை ஸ்ரீ முத்துக்குமார சுவாமி ஆலயதின் யாகசாலைக்கான அடிக்கல் வைக்கும் நிகழ்வு ஆலய பரிபாலன சபைத் தலைவர் சாரங்கபாணி அருள்மொழி தலமையில் நேற்று 19ம் திகதி இடம் பெற்றது.
இன் நிகழ்வில் ஆலயபரிபாலன சபையினர்,முன்னாள் மேலதிக அரசங்க அதிபர் அருணகிரிரி நாதன், திருப்பெரும் துறைக்கான கிராம உத்தியோகத்தர் எ.லிங்கநாதன்,ஆலய குருக்கள்மற்றும அப்பகுதிவாழ் பொதுமக்களும் என பலர் கலந்து சிறப்பித்தனர். அத்துடன் இவ் யாக சாலை புணருத்தாபனத்திற்கு நண்கொடை செய்ய விரும்பும் பக்த அடியார்கள் ஆலயத்துக்கு வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றனர்.
















