மாற்றுத்திறனாளிகளின் தொழில் முக்கியத்துவம் தொடர்பாக விழிப்புணர்வூட்டல் நிகழ்வு

ஜரோப்பிய ஒன்றியம் மற்றும் கன்டிகப் இன்ரர்நெசனல் நிறுவனங்களின் நிதியுதவியுடன்  கமீட் நிறுவனம் அமுல்படுத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்வாதார திட்டத்தின் ஒரு பகுதியான தொழில் முக்கியத்துவம் தொடர்பான விழிப்புணர்வூட்டல் நிகழ்வு கமீட் அமைப்பின் திட்ட வெளிக்கள உத்தியோகத்தர் எம்.ஜெயகுமார் தலைமையில் நேற்று முன்தினம் (21) செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வேப்பவெட்டுவான் நூலகத்திலும், ஜயங்கேணி வள நிலையத்திலும் நடைபெற்றது.

இதன் போது அப்பிரதேசத்திற்குட்பட்ட யுத்தத்தினாலும் இயற்கையாலும் வலது குறைந்த மாற்றுத்திறணாளிகளும் அவர்களது குடும்பத்தினர்களும் கலந்து கொண்டதுடன் அவர்களுக்கான தொழில் தொடர்பான உள்நாட்டு மற்றும் சர்வதேச சட்டங்கள் சம்மந்தமாகவும், அனுவப் பகிர்வும் நடைபெற்றது. அத்துடன் மாற்றுத்திறணாளிகளின் தொழில் முக்கியத்துவம் தொடர்பான விழிப்புணர்வூட்டல் நாடகமும் அரங்கேற்றப்பட்டது.