மக்கள் வங்கியினால் தாந்தோன்றீஸ்வரத்தில் தாகசாந்தி வழங்கப்பட்டது.

(படுவான் பாலகன்) நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற கொக்கட்டிச்சோலை தாந்தோன்றீஸ்வரர் ஆலய மகோற்சவத்தின் தேரோட்ட பெருவிழாவினை கண்டு அருள்பெற்றேக திரளாக கூடும் அடியார் கூட்டத்திற்கு மட்டக்களப்பு மக்கள் வங்கி இந்துமாமன்றத்தினரால் குளிர் பானங்கள் வழங்கும் நிகழ்வு இன்று காலை ஆரம்பிக்கப்பட்டது.
ஆலய முன்றலில் கொக்கட்டிசோலை மக்கள் வங்கி முகாமையாளர் திரு இளங்கோ அவர்களின் தலமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்தம் குருக்கள், சிவஸ்ரீ வ.சோதிலிங்கம் குருக்கள், பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம், மற்றும் மக்கள் வங்கி சிரேஸ்ட முகாமையாளர்கள், ஆலய வண்ணக்குமார், ஏனைய உதியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

அத்துடன் பல்வேறுபட்ட மக்கள் வங்கி சேவைகளும் இதன்போது வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.