(உ.உதயகாந்த்)
கிழக்கு
மாகாண சமுக சேவைகள் திணைக்களத்தினால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுவரும் சேவைகள்
தொடர்பாக வழிகாட்டும் பதாதைகளை வெளியீடு செய்யும் வைபவம் இன்று (29) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு
பிரதேச செயலக சமுக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.எம்.எம்.அமீன் தலைமையில் இடம்பெற்ற
இவ்வைபவத்திற்கு ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் பிரதம அதிதியாகக்
கலந்து சிறப்பித்ததுடன் கிழக்கு மாகாண சமுக சேவைகள் திணைக்களத்தின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு
பிரதேச செயலக சமுக சேவைகள் பிரிவினால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுவரும் சேவைகள்
தொடர்பான விரிவான தகவல்கள் அடங்கிய வழிகாட்டிப் பதாதைகளை உத்தியோகப்பூர்வமாக
வெளியிட்டுவைத்தார்.
தொடர்ந்து
கிராம மட்டங்களில் சேவையாற்றும் கிராம உத்தியோகத்தர்கள், திவிநெகும அபிவிருத்தி
உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சிறுவர் மற்றும்
பெண்கள் அபிவிருத்தித் பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோருக்குத் தமது
கிராமமட்டப் பணிமனைகளில் காட்சிப்படுத்தும் பொருட்டு குறித்த பதாதைகள் பிரதேச செயலாளரால்
உத்தியோகப்பூர்வமாகக் கையளிக்கப்பட்டன.












