மட்டக்களப்பு மாவட்டத்தின் மஞ்சந்தொடுவாய் பிரசேத்தில்; ஹெரோயின் வைத்திருந்ததாகக் கூறப்படும் ஒருவரை இன்று வெள்ளிக்கிழமை கைதுசெய்ததாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், இவரிடமிருந்து 260 மில்லிகிராம் ஹெரோயினை கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.
கைப்பற்றிய ஹெரோயினுடன் சந்தேக நபரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவைச் சேர்ந்த எஸ்.ஐ.எதிரிசூரிய தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினரே இந்தச் சந்தேக நபரை கைதுசெய்துள்ளனர்.