கொழும்பில் ஆரம்பமான சைக்கிளோட்டம் மட்டக்களப்பு நகர மத்திய பஸ் நிலையத்தில்


(சிவம்)

இருளில் இருந்து வெளிச்சத்திற்கு வாருங்கள் எனும் தலைப்பில் கடந்த 31 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமான 1333 கி.மீ சைக்கிளோட்டம் இன்று மட்டக்களப்பு நகர மத்திய பஸ் நிலையத்தை வந்தடைந்தது.

நேற்று (06) திருகோணமலையிலிருந்து அரம்பமான சைக்கிளோட்டம் இன்று (07) மட்டக்களப்பு பஸ் நிலையத்திற்கு வந்த சைக்கிளோட்ட வீரர்களை மட்டக்களப்பு ரோட்டறிக்கழகம் , மாநகர சபை மற்றும் பிரதேச செயலக ஊழியர்கள் வரவேற்றனர்.


இலங்கையில் சராசரி நாளாந்தம் 11 பேர் தற்கொலை செய்து கொள்வதாகவும், 140 போ தற்கொலைக்கு முயற்சிப்பதாகவும் மட்டக்களப்பு ரோட்டறிக்கழக தலைவர் டொமிங்கோ ஜோர்ஜ் தெரிவித்தார்.

இவற்றைத் தடுப்பதற்காக மக்களிற்கு விழிப்புணர்வூட்டும் நாடகம் பஸ் நிலையத்தில்; இடம்பெற்றது.

கொழும்பிலிருந்து சிலாபம், அனுராதபுரம், கிளிநொச்சி , யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பை முடித்துக்கொண்டு நாளை (07) மட்டக்களப்பிலிருந்து ஆரம்பமாகி அறுகம்பையை சென்றடையவுள்ளது.
அறுகம்பையிலிருந்து ஹம்பாந்தோட்டை, காலி, பெந்தோட்டை வழியாக கொழும்பைச் சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.