நட்புறவு மகளீர் உதைபந்தாட்ட போட்டி

(V.Neerajan)

எதிர்வரும் 23,24,25  ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ள பாடசாலைகளுகிடையான தேசிய மட்ட மகளீர்  உதைபந்தாட்ட போட்டியில் கலந்து கொள்ள உள்ள மாகாணமட்ட போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட  கடுக்காமுனை வாணி வித்தியாலய மகளீர் அணிக்கும், மாகாண மட்ட போட்டியில் மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்ட  பனிச்சங்கேணி திருமகள் வித்தியாலய மகளீர் அணிக்குமான நட்புறவு உதைபந்தாட்ட போட்டி ஒன்று    கடுக்காமுனை வாணி வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் புதன் கிழமை  (17.09.2014)    இன்று நடைபெற்றது.


இவ் விளையாட்டு நிகழ்வுகள்  கடுக்காமுனை வாணி வித்தியாலய  அதிபர் திரு .S. தேவராஜன்  தலைமையில் ஆரம்பிக்கப்பட்டு இப் பாடசாலையின் உதைபந்தாட்ட அணிக்கு பயிற்றுவிப்பாளராக  திகழ்கின்ற  .ஜீவரெத்தினம்  ஆசிரியர் அவர்களின் நெறியாள்கையில் இடம்பெற்றன.

  நிகழ்வில்  கடுக்காமுனை வாணி வித்தியாலய பிரதி அதிபர்.S .கருணாமூர்த்தி, சுகாதார பாட ஆசிரியர்  K .ஜெயராமன் மற்றும் ஏனைய ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.

அத்துடன்   பனிச்சங்கேணி திருமகள் வித்தியாலய அணி சார்பாக உதைபந்தாட்ட அணி பயிற்றுவிப்பாளர் திரு .L .திருநிறைச்செல்வன் ஆசிரியரும் , ஆங்கில ஆசிரியை செல்வி .R .பிறேமராகினி அவர்களும் கலந்துகொண்டனர்.


இவ் நிகழ்வில் நட்புரீதியாக இரு அணிகளுக்கும் பல பயிற்சிகள் .M .ஜீவரெத்தினம்   , L .திருநிறைச்செல்வன்   ,கடுக்காமுனை வாணி வித்தியாலய  வேந்தராசா   , கடுக்காமுனை வாணி வித்தியாலய பழைய மாணவரும் உதவி பயிற்று விப்பாளருமான  M .வினோகரன் ஆகியோரால் வழங்கப்பட்டன .

இறுதியில் இரு அணிகளுக்கும் இடையில் அரை மணித்தியாலம், அரை மணித்தியாலம் என்ற அடிப்படையில் இடம்பெற்ற உதைபந்தாட்ட போட்டியில்  கடுக்காமுனை வாணி வித்தியாலய மகளீர் அணி 2-0 (இரண்டுக்கு பூச்சியம்) என்ற அடிப்படையில்  பனிச்சங்கேணி திருமகள் வித்தியாலய மகளீர் அணியை வெற்றிகொண்டது.