அம்பாறை மாவட்டத்தில் நெல் விலை மூவாயிரம் ரூபா ! விவசாயிகள் மகிழ்ச்சி

அம்­பாறை மாவட்­டத்தில் வர­லாற்றில் முன்­னொ­ரு­போ­து­மில்­லா­த­வ­கையில் நெல்­லின்­விலை 3000ரூபா வரை உயர்ந்­துள்­ளது.
தனி­யாரால் 1750 ரூபா­வுக்கு கொள்­வ­னவு செய்­யப்­பட்­டு­வந்­த­ நெல்­மூடை ஒன்று தற்­போது 3000 ரூபா வரை உயர்ந்­துள்­ளது. இம்­முறை மழை பொழி­யா­மை­யினால் இங்­கி­னி­யா­கல குளத்தின் நீர்க்­கொள்­ள­ளவு குறைந்­த­மை­யை­ய­டுத்து சிறு­போக வேளாண்­மைச்­செய்கை 50 வீத­மாக குறைக்­கப்­பட்­டி­ருந்­தது கார­ண­மாகும்.

குறைந்­த­ளவு வயற்­கா­ணி­களில் நெற்­செய்கை மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­ததால் தற்­போது அறு­வடை செய்த கையோடு நெல்லை முண்­டி­ய­டித்­து­கொண்டு கள­வட்­டி­யி­லேயே கொள்­வ­னவு செய்­வ­தைக் ­கா­ணக்­கூ­டி­ய­தா­யுள்­ளது. வெளி­யி­லி­ருந்து வரும் வர்த்­த­கர்­களே இவ்­விதம் பெரு­ம­ளவில் கொள்­வ­ன­வு செய்கின்றனர்.


தனி­யாரால் 1750 ரூபா­வுக்கு கொள்­வ­னவு செய்­யப்­பட்ட நெல் மூடை ஒன்று தற்­போது 3000 ரூபா வரை உயர்ந்­துள்­ளது.
இம்­முறை பெரும்­பா­லான விவ­சா­யிகள் அரச நெல்­கொள்­வ­ன­விற்­காக நெல்லை களஞ்­சி­யங்­க­ளுக்கு வழங்­க­வில்லை. ஏனெனில் தனி­யா­ரிடம் நெல்லின் கொள்­வ­னவு விலை அதி­க­மாக இருந்­ததே கார­ண­மாகும்.தற்­ச­மயம் விவ­சா­யி­க­ளிடம் நெல் விற்­ப­னைக்கு இல்லை என்ற நிலை­தோன்­றி­யுள்­ளது.
இன்னும் பல விவ­சா­யிகள் நெல்லின் விலை மேலும் உயர்­வ­டை­யலாம் என்­றெண்ணி பதுக்­கி­வைத்­துள்­ளனர். நாளுக்­குநாள் நெல்­லின்­விலை உயர்­வ­டைந்து வரு­வதே கார­ண­மாகும். இன்னும் விலை உயர்­வ­டை­யலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இதே­வேளை பெரும்­போக நெற்­செய்கை ஆரம்­ப­மாகியிருப்­பதால் விதை­நெல்­லுக்கும் மௌசு ஏற்­பட்­டுள்­ளது. 1 மூடை விதை நெல் 3500 ரூபா­வுக்கு விற்­கப்­ப­டு­கி­றது.

விவ­சா­யிகள் மகிழ்ச்சி
காரை­தீ­வைச்­சேர்ந்த மூத்த பெரும் விவ­சாயி இரா. திரு­நா­வுக்­க­ரசு தெரி­விக்­கையில் வர­லாற்றில் ஒரு மூடை நெல்­லின்­ விலை 3000 ரூபா­வுக்கு விற்­றது இம்­மு­றைதான். சில இடங்­களில் 3300 ரூபா வரையும் சென்­றி­ருக்­கி­றது.
விவ­சா­ய­ ச­மூ­கத்தை பொறுத்­த­வரை அது மிக்க மகிழ்ச்சி. இம்­முறை நல்ல விளைச்­ச­லும்தான். இறைவன் கண்ணைத் திறந்­துள்ளான். அதனால் விவ­சா­யிகள் மகிழ்­ச்சி­ய­டைந்­துள்­ளனர்.எம்­மைப்­பொ­றுத்­த­வரை வெளி­யூரோ உள்­ளூரோ எந்த வியா­பாரி கூடுதல் விலையைத் தரு­கி­றார்­களோ அவர்­க­ளுக்கு நெல்லை வழங்­குவோம். ஏனெ­னில் நாம் பாடு­பட்டு வியர்வை சிந்தி கஷ்­டப்­பட்டு நெல்லை உற்­பத்தி செய்­ப­வர்கள்.எமது உற்­பத்­திக்கு எங்கு கூடுதல் விலையுள்ளதோ அங்கு வழங்குவோம்.
உள்ளூர் அரிசி ஆலை உரிமையாளர்கள் தமக்குள்ளே கலந்துரையாடி விவசாயிகள் நன்மையடையாவண்ணம் தமக்குள் விலையை வரையறுத்துக்கொண்டு தாம் மட்டும் இலாபமீட்டி செயற்பட்டுவந்தமை இம்முறை முறியடிக்கப்பட்டுள்ளமை வரவேற்புக்குரியது என்றார்.