பெரியபோரதீவு முத்துலிங்கப் பிள்ளையார் ஆலய சங்காபிஷேகத்தை முன்னிட்டு பால்குடப் பவனி


(சிவம்)

மட்டக்களப்பு பெரியபோரதீவு முத்துலிங்க விநாயகர் ஆலய 1008 சங்காபிஷேகத்தை முன்னிட்டு பால்குடப் பவனி இன்று திங்கட்கிழமை (22) இடம்பெற்றது.

முனைத்தீவு மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமான பால்குடப்பவனி பட்டாபுரம், பெரியபோரதீவு பிரதான வீதி வழியாக பெரியபோரதீவு பத்திரகாளியம்மன் ஆலயத்தை சென்றடைந்து அங்கிருந்து பிள்ளையார் ஆலயத்தை வந்தடைந்தது.

முல மூர்த்தியான விநாயகருக்கு குருமார்களாலும்  மற்றும் பஞ்சமுக விநாயகருக்கு அடியார்களாலும் பாலாபிஷேகம் செய்தனர்.