கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் சிசுவொன்றின் சடலம் மீட்பு

திருகோணமலை, பள்ளதோட்டம் முருகன் கோயிலை அண்மித்த கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

சிசுவின் தலைப்பகுதி சேதமடைந்துள்ளதுடன், சிசு கடலில் அடித்து வரப்பட்டிருக்கக்கூடும் என சந்தேகிப்பதாகவும் பொலிஸார் கூறினர்.

மீட்கப்பட்ட சடலம், திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.