வவுனதீவு பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டம்

(வரதன் ) மட்டக்களப்பு மாவட்டத்தின்  வவுனதீவு பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டம் பிரதேச செயலக கேட்போர்கூடத்தில்   நடைபெற்றது.

இப் பிரதேசத்தில் இவ்வருடம் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தித்திட்டங்கள்இ எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய அபிவிருத்திகள் பற்றி  கலந்துரையாடப்பட்டன.


இப்பிரதேசத்தில் இவ்வருடம் பொருளாதார அபிவிருத்தித்திட்டம் கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டம் திவிநெகும திட்டம்  மீள்குடியேற்ற அமைச்சின் மூலம் பெறப்பட்ட வேலைத்திட்டம்   பற்றி  பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் விபரம்  தெரிவித்தார்.

பிரதேச அபிருத்திக்குழுத் தலைவரும் மீள்குடியேற்றப் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரனின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான பி.இந்திரகுமார்,  கோ.கருணாகரம்,  மா.நடராசா,  இரா.துரைரெட்ணம்,  ஞா.கிருஷ்ணபிள்ளை  வவுனதீவு பிரதேச செயலாளர் S.சுதாகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.