தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் வந்தாறுமூலை விஷ்ணு மகாவித்தியாலத்தில் 11 மாணவர்கள் தெரிவு

(சித்தாண்டி நித்தி) 2014ம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் கல்குடா கல்வி வலய ஏறாவூர்பற்று கல்விக் கோட்டத்திலுள்ள வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயத்திலிருந்து 11 மாணவர்கள் இம்முறை தெரிவாகியுள்ளனர். இம்முறை 100 புள்ளிகளுக்கு மேல் 62 மாணவர்கள் புள்ளிகளைப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுடன் பாடசாலையின் அதிபர் திரு. எஸ்.மோகன் மற்றும் பிரதி அதிபர்களான கே.ரோமபாதன் என்.கோனேசராசா ஆசிரியைகளான திருமதி.என்.பிரகலாதன் திருமதி.பி.மகேந்திரன் ஆகியோரை படங்களில் காணலாம்.