வண பிதா வெபர் ஞாபகார்த்த கால்ப்பந்தாட்டப் போட்டி – பாடும்மீன் அணி அரையிறுதிக்குத் தகுதி

 மட்டக்களப்பு கால்ப்பந்தாட்டச் சங்கத்தினால் மைக்கல் மேன் விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையுடன் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடத்தப்பட்டு வரும் ஏ பிரிவு கழகங்களுக்கிடையிலான வண பிதா வெபர் ஞாபகார்த்த கால்ப்பந்தாட்டச் சுற்றுப் போட்டிகளில் இன்றைய தினம் (12.10.2014) நடைபெற்ற பாடும்மீன் அணிக்கும் யங்ஸ்டார் அணிக்கும் இடையிலான காலிறுதிப் போட்டியில் 2:0 எனும் பேறுகளினடிப்படையில் பாடும்மீன் அணி யங்ஸ்டார் அணியை வெற்றி கொண்டு அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.

நாளைய தினம் (13.10.2014) பிற்பகல் 3.30 இற்கு ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி அணிக்கும் இக்னேசியஸ் அணிக்கும் இடையிலான போட்டி நடைபெறவுள்ளதாக கால்பந்தாட்டச் சங்க செயலாளர் தே.காந்தன் வெற்றி நியுஸிற்கு அறிவித்துள்ளார்.