(சித்தாண்டி நித்தி) வெருகல் சூரநகர் கிராமத்தில் யுத்தத்தினால் தந்தை இழந்த 02 சிறுவர்களுக்கு அவர்களின் கல்வி நடவடிக்கைக்காக உதவிகள் கடந்த 2014.10.27 திகதி SUN RISE ORGANIZATION தாபனத்தின் உறுப்பினர்களின் உதவியினால் வழங்கிவைக்கப்பட்டன.
இக்கிராமத்தில் இத்தாபனம் கடந்த 02 வருடங்களாக சேவை புரிந்து வருகின்றது அதன் பயனாக கடந்த வருடம் 01 மாணவன் புலமை பரீட்சையில் சித்தி அடைந்தமை குறிப்பிடத்தக்க விடையாமாகும் SUN RISE ORGANIZATION வாகரையில் இளைஞர்களால் உருவாக்கப்பட்ட தாபனமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. பால்சேனை கிராமம் மற்றும் சூரநகர் கிராமத்திலும; மாணவர்களின் கல்வி விருத்தியை அதிகரித்துக்கொள்வதற்காக படிப்பகங்களை நடாத்திவருகின்றமை குறிப்படத்தக்கது.
















