(Ravindramoorthy)
பேராசிரியர் மௌனகுருவின் நெறியாள்கையில் தயாரிக்கப்பட்ட 'நொண்டி நாடகம்' விழா இன்று பி.ப 4.30 மணிக்கு மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் 'மகுடம் இலக்கிய வட்டம்' ஏற்பாட்டில் இடம் பெறவுள்ளது.
ஒரு மணித்தியாலத்தைக் கொண்ட இந்த இரசணை மிக்க நாடகத்தினை கண்டுகளிக்க வருமாறு அழைக்கின்றனர்" மகுடம்" இலக்கிய வட்டத்தினர். இந் நாடகத்திற்கான அனுமதி இலவசம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பில் இன்று ஆடப்படுவதும் மன்னாரில் பண்டு ஆடப் பட்டதுமான நொண்டி நாடகம் ஒருபழமைவாய்ந்த தென் மோடிக் கூத்தாகும். பரிகாசமும், கிண்டலும், அங்கதச்சுவையும், அறப்போதனைகளும் நிறைந்தது இக் கூத்து.அரசர்வரலாறுகூறும் கூத்துமரபில் அரசர்அல்லாதோர் பற்றிக் கூறும் முதல் நாடகமாக இதனைக் கொள்ளலாம்.
இது தென்மோடிகூத்தின் இசையினை அடிப்படையாக வைத்து நவீன மேடைக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட புதிய ஆக்கமாகும். 1962இல் பேராசிரியர் வித்தியானந்தன் பேராததனைப் பல்கலைக் கழகமாண்வர்களைக் கொண்டு இந்நாடகத்தை செம்மை ஆக்கம் செய்து மேடை இட்டார்.ஏறத்தாழ 52வருடாங்களுக்குப் பின் இதனைபுதிய வடிவத்துடன் ஒரு பரீட்சாத்தமாக உருவாக்கியுள்ளார் பேராசிரியர்மௌனகுரு.
பேராசிரியர் சு. வித்தியானந்தன்1962 இல் இந் நாடகத்தை பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களைக் கொண்டு மேடையிட்டார். ஏறத்தாள 52 வருடங்களின் பின் இதனை புதிய உத்திகளுடனும்புதிய பரிமாணத்துடனும் இதற்கு ஒரு மேடை வடிவம் கொடுத்துள்ளார் பேராசிரியர் மௌனகுரு
தமிழில் ஒரு ஒபேறாவை (opera) கொணரவேண்டும் என்றபேரவாவின் ஆரம்ப முயற்சி இது என்கிறார்நெறியாளர் மௌனகுரு இதனை ஒருஇசைநாடகமாக உருவாக்குவதில்மௌனகுருவுக்கு உதவியாக ஸ்வாமி விபுலானந்தஅழகியல்கற்கைகள் நிறுவக முன்னாள் இசைத்துறை தலைவி பிரியதர்ஷினி ஜெதீஸ்வரன்.ஓய்வு நிலை இசைத்துறை விரிவுரையாளர் சரஸ்வதி சுப்ரமணியம் ஹார்மோனிய இசை விற்பன்னரான ஜூட்.மத்தளம்இதபேலா முதலிய தோல் கருவிகளைஇசைக்கும் மோகனதாசன் ஆகிய இசைக்கலைஞர்கள் உதவியுள்ளனர்.
பல இசைக் கலைஞர்களின் சங்கமைப்பில் உருவான நாடகம் இது
இந்நாடகத்தை பொது மக்கள்முன் மகுடம் இலக்கிய வட்டம் சார்பில் கொண்டு வருகிறார் மகுடம் ஆசிரியர்மைக்கல் கொலின்ஸ்
மட்டக்களப்பு மாநகரசபை மண்டபம்.1950, 1960, 1970களில் நாடகங்கள் மேடையிடும் களமாக அமைந்திருந்தது.மீண்டும் அச்சூழலை உருவாக்க முயல்கிறார் துடிப்பு மிக்க மாநகரசபை ஆணையாளர் உதயகுமார். இவர்களின்உதவியினாலேயே இந்நாடகம் மேடைஏறுகிறது













