மட்/இந்துக்கல்லூரியின் நவராத்திரி விழா - வாணிவிழா

(இ.விதுலலோஜன்)
மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் நவராத்திரி விழா கடந்த 24.09.2014 அன்று பாடசாலையின் ஆலயத்தில் மட் /இந்துக்கல்லூரி தண்டாயுத பாணி ஆலயத்தில் நவராத்திரி கும்பம் வைக்கப்பட்டு 8நாட்களும் மிகவும் சிறப்பான முறையில் பூஜைகள் இடம்பெற்று 09ம் நாளான இன்று எமது பாடசாலையில் வாணி விழா மிகவும் சிறப்பான முறையில் கல்லூரி முதல்வர் அருட்பிரகாசம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது ஆலயத்தில்  பூஜைகள் இடம்பெற்று இவ் வாணி விழாவின் சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு இந்து ஒன்றியத்தின் பிரச்சார செயலாளர்  தியாகராஜா அவர்கள் கலந்து கொண்டதுடன் பல கலை நிகழ்வுகலும் இடம்பெற்றன.

அத்தோடு தேத்தாதீவு நாட்டிய நாடக குழுவினரின் நாட்டிய நாடகமும் இடம்பெற்று  மிகவும் சிறப்பான முறையில் வாணி விழா நடைபெற்று முடிந்தது.அத்தோடு நாளய தினம் விஜயதசமி அன்று ஆலயத்தில் உள்ள நவராத்திரி கும்பம் சொறியப்பட உள்ளது.