தமிழ் முஸ்லிம்கள் இழந்த சொத்து கல்வியும் இன் ஒற்றுமையும் - கிழக்கு மாகாண சபை பிரதித் தவிசாளர் எம்.எஸ். சுபைர்.

(சுழற்சி நிருபர்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட உறுகாமம் கிராமத்தில் வறிய நிலையிலுள்ள 28 மாணவர்களுக்கு பாடசாலைப் பாதணிகள் வழங்கும் வைபவம் இன்று செவ்வாய்க்கிழமை 07.10.2014 இடம்பெற்றது.
கிழக்கு மாகாண சபை முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளருமான எம்.எஸ். சுபைரின் வேண்டுகோளுக்கிணங்க சவூதி அரேபிய கொடை வள்ளல்கள் அல்கிம்மா நிறுவனத்தினூடாக இதற்கு நிதி உதவி வழங்கியிருந்தனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் எம்.எஸ். சுபைர், இப்பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்கள் கடந்த இரண்டு தசாப்த கால யுத்தத்தின் விளைவாக விரட்டியடிக்கப்பட்டார்கள்.
அதேபோன்று தமிழ் மக்களும் இடம்பெயர்ந்திருந்தார்கள். தற்சமயம் இந்த இரண்டு சமூகத்தவர்களும் மீண்டும் ஒன்றிணைந்து வாழக்கூடிய சமாதான சூழல் இங்கு ஏற்பட்டுள்ளது.

கடந்த யுத்தத்தின் விளைவாக உறுகாமம் பிரதேசத்தில் வாழ்ந்த தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் தமது கல்வியையும் இழந்துள்ளார்கள். அதனோடு சேர்த்து இன ஒற்றுமையும் சீர்குலைக்கப்பட்டு விட்டது.
எனவே, நாம் கடந்த 30 வருடங்களாக இழந்து விட்ட அழியாச் சொத்தான கல்வியையும், இன ஐக்கியத்தையும் மீண்டும் பெற்றுக் கொள்ள வேண்டும்.
இதுவே இன்றைய முக்கிய தேவையாகும். இன ஒற்றுமையையும் கல்வியையும் மீளப் பெற்றுக் கொடுப்பதற்காக நாம் தமிழ் முஸ்லிம் என்ற பேதமில்லாது இரவு பகலாகப் பாடுபடுகின்றோம். புhதிக்கப்பட்டுப் போயுள்ள வறிய தமிழ் முஸ்லிம் சிறார்களுக்கு எங்கிருந்தேனும் உதவி பெற்றுக் கொடுப்பதில் நாம் நாம் மும்முரமாக ஈடுபடுகின்றோம்.
அதற்காகவே வெளிநாட்டுக் கொடை வள்ளல்களிடமும் நாம் கையேந்துகின்றோம். அவர்களை உங்கள் பகுதிக்கு அழபை;பித்து வந்து உங்கள் வறுமையை நேரடியாகக் காண்பிக்கின்றோம்.

எனவே நம்மையெல்லாம் சின்னா பின்னமாக்கி ஈடுசெய்ய முடியாத இழப்புக்களை ஏற்படுத்திய தமிழ் முஸ்லிம் இன விரோத செயற்பாடுகள் இனியும் நடக்க நாம் அனுமதிக்கக் கூடாது.
இளம் பிஞ்சு உள்ளங்களில் இன ஒற்றுமையை வளர்க்க வேண்டும் என்றார்.
உறுகாமம் கிராம காட்டு வீதிகளில் இரவில் வெளிச்சமேற்றுவதற்காக சுமார் 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியான மின்சார பல்புகளையும் அறபு நாட்டு கொடைவள்ளல்கள் வழங்கினர்.


உறுகாமம் சுபைர் ஹாஜியார் வித்தியாலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அல்கிம்மா நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் எம்.எம்.எஸ். ஹாறூன், அல்கிம்மா நிறுவனத்தின் சவூதி அரேபிய பிரதி நிதிகள் மற்றும் அறபு தேச கொடை வள்ளல்கள், உறுகாமம் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் எஸ்.எம். மஹ்ரூப், சுபைர் ஹாஜியார் வித்தியாலய அதிபர் ரீ.எம். கஸ்ஸாலி, உதவி ஆசியர்களான ஏ.எச். அப்துல் கபூர், ஏ.எஸ். லாபீர் உட்பட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.