(சதீஸ்)
மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலகத்தில் கடந்த விஜயதசமி நிகழ்வின்போது அப்பிரதேசத்திலுள்ள வசதி குறைந்த பத்து மாணவரகளுக்கு கற்றல் உபகரணங்கள் பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் அவர்களின் ஏற்பாட்டில் வழங்கிவைக்கப்பட்டது.
வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தின் "திவிநெகும மன்று" நிதியிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 10 மாணவர்களுக்கு புத்தகப்பைகள் உட்பட கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
இதன்போது பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், உதவி பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு, உதவி திட்டமிடல் பணிப்பாளர் ரி.நிர்மல்ராஜ் மற்றும் வாழ்வின் எழுச்சி முகாமைத்துவப் பணிப்பாளர் ரி.சத்தியசலன் உள்ளிட் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு இவ் உபகரணங்களை வழங்கிவைத்தனர்.












