(ஜெயா)மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரேயொரு அரச தொழில்நுட்பக்கல்லூரியான மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியின் இரண்டாவது கணனிக்கூடம் எதிர்வரும் 14.10.2014 அன்று செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது.
இக் கணணி கூடம் சர்வதேச கொரிய அமைப்பின் பங்களிப்புடன் 4 மில்லியன் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தொழில்நுட்பக்கல்லூரியின் பாடவிதானத்தின் தேவையினை ஈடு செய்யும் கொள்ளலவினைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
இக் கணணிக்கூடத்தின் உதவியினால் எதிர்வரும் 2015ம் ஆண்டில் ஆரம்பிக்கப்படவுள்ள தகவல் தொழில்நுட்ப கற்கைநெறியானது (ICT) தமிழ் மற்றும் ஆங்கில மொழிகள் மூலம் இரண்டு கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொழில்நுட்பகல்லூரி அதிபர் ரி. ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
திறப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக தொழில்நுட்பக்கல்வி பயிற்சித்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் J.A. றஞ்த்ஜி அவர்களும், கொய்கா அமைப்பின் பணிப்பாளர் சு. குயுசான் அவர்களும் சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. P.S.M. சாள்ஸ் அவர்களும், அம்பாறை ஹாடி தொழில்நுட்பவியல் கல்லூரியின் பணிப்பாளர் அவர்களும் கலந்து கொள்ளவுள்ளார்கள்.
எதிர்வரும் 2015ம் ஆண்டு 30ற்கு மேற்பட்ட கற்கை நெறிகள் இலவசமாக கற்பிக்கப்படவுள்ளது. மாணவர்களின் வருமானத்தினைப் பொறுத்து மாதமொன்றுக்கு ரூபா 1000ஃ உதவியும், 65% மானியத்துடன் பருவகாலச் சீட்டும் வழங்கப்படும் என தொழில்நுட்பகல்லூரி அதிபர் ரி. ரவிச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.














