(UK,
Batti)
சிறுவர்
அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச
செயலக சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்திப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாடசாலை
மாணவர்களுக்கான சர்வதேச சிறுவர் தின சிறப்பு நிகழ்வுகள் அண்மையில் ஆலையடிவேம்பிலுள்ள
திருநாவுக்கரசு வித்தியாலயத்தில் இடம்பெற்றன.
இரண்டு
நிகழ்வுகளாக நடாத்தப்பட்ட இவ்வைபவம் காலை தரம் – 1 முதல் 5 வரையான மாணவர்களுக்கான
கேளிக்கை விளையாட்டு நிகழ்வுகளுடன் ஆரம்பமாயின. இதில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக
முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தன், உளவள ஆலோசகர் ஏ.எம்.சப்றினா, பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்
திருமதி. சிபாயா றமீஸ் ஆகியோருடன் பாடசாலை அதிபரும் ஆசிரியர்களும் கலந்து
சிறப்பித்தனர். அடுத்து ‘பாசத்தோடு எம்மைப் பாதுகாருங்கள்’ என்ற தொனிப்பொருளில் மாணவர்களுக்கான
ஓவியம் வரையும் நிகழ்வும் இடம்பெற்றது.
தொடர்ந்து
இரண்டாவது நிகழ்வாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் இடம்பெற்ற
ஒக்டோபர், 11 சர்வதேச பெண் சிறுமியர் தின நிகழ்வில் உதவித் திட்டமிடல் பணிப்பாளர்
திருமதி. திலகராணி கிருபைராஜா, பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. சிபாயா
றமீஸ் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.பார்த்தீபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது எமது சமுகத்தில் பெண் பிள்ளைகளைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்த பிரதேச
செயலாளரது உரையும், நவீன தொழில்நுட்பப் பயன்பாடும் பெண்கள் மீதான துஷ்பிரயோகமும்
தொடர்பாக உதவித் திட்டமிடல் பணிப்பாளரின் உரையும் இடம்பெற்றன.
இறுதி
நிகழ்வாக பிரதேச செயலாளர் தலைமையில் குறித்த மாணவர்களுக்கான பரிசளிப்பு வைபவம்
இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.












