வண பிதா வெபர் ஞாபகார்த்த கால்பந்தாட்டச் சுற்றின் இரண்டாவது போட்டியில் யங்ஸ்டார் அணி வெற்றி


மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்டச் சங்கம் மைக்கல் மென் கழகத்தின் அனசரணையுடன் நடத்தும் பாதர் வெபர் ஞாபகார்த்த கிண்ணத்திற்கான ஏ பிரிவு நொக்கவுட் சுற்றுப் போட்டியின் இரண்டாவது போட்டி இன்று (09.10.2014) மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் மாலை 4.30 மணியளவில் சீலாமுனை யங்ஸ்டார் கழகத்திற்கும் கல்லடி கடல்மீன்கள் கழகத்திற்கும் இடையில் நடைபெற்றது.

இப்போட்டியில் இரு அணிகளும் தலா 01 பேறினைப் பெற்றிருந்ததால் தண்டனை உதை மூலமான தீர்வில் சீலாமுனை யங்ஸ்டார்  கழகம் வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

நாளைய தினம் (10.10.2014) டிஸ்கோ அணியினருக்கும் கோட்டைமுனை அணியினருக்கும் இடையிலான போட்டி நடைபெறுவுள்ளமை குறிப்பிடத்தக்கது.