வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற ஆசிரியர் தின விழா

(சித்தாண்டி நித்தி) 2014ம் ஆண்டுக்கான ஆசிரியர் தின விழாக் கொண்டாட்டங்கள் பாடசாலைகளில் நடைபெற்ற வேளை வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயத்திலும் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றன. 

ஆசிரியர் தினம் என்றாலே தங்களுக்கு கல்வி அறிவையூட்டும் கல்வி ஆசான்களை பாராட்ட வேண்டும் அவர்களை கௌரவப்படுத்த வேண்டும் என ஒவ்வொரு மாணவர்களும் மகிழ்சியடைந்து அவ்வாறானதொரு நாள் வரும்வரை சில பரிசுப்பொருட்களுடன் கையில் மாலையுடனும் காத்திருப்பார்கள். அவ்வாறு ஆசிரியர்களை கௌரவப்படுத்த வேண்டும் என நினைத்து மாணவர்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு விழாவே வந்தாறுமூலை விஷ்ணு வித்தியாலய மணவர்களினால் ஆசிரியர் தினம் நடைபெற்றன. பாடசாலையின் அதிபர் திரு.மோகன் உட்பட ஆசிரியர்கள் கதாநாயகர்களாக அழைக்கப்பட்டு மலைமாலை அணிவித்து பாடசாலையின் பிரதான மண்டபத்திற்கு அழைத்தனர். 

நிகழ்வின்போது மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகி மாணவர்களின் நடனங்கள் மற்றும் நடாகங்கள் இடம்பெற்றதுடன், மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆசிரியர் தின நினைவுச் சின்னங்களும் பாடசாலை அனைத்து ஆசிரியர்களுக்கும் மாணவர்களால் கௌரவித்து வழங்கப்பட்டன.