(சக்தி) மட்டக்களப்பு மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை இலங்கை அரச சட்டதிட்டங்களுக்கு முரணாக செயற்பட்டு மக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்குவதாக மட்டக்களப்பு மநாகர சபையின் முன்னாள் பிரதி மேயர் யு.ஜோர்ஜ்பிள்ளை மட்டக்களப்பு பொலிசாரிடம் இன்று வியாழக் கிழமை (02) முறைப்பாடு செய்துள்ளார்.
இவ்வியடம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது ….
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுனதீவு பிரதேசத்தினையும் மட்டு நகரையும் இணைக்கும் பிரதான பாதையாகவும் விமான நிலையம், போதனாவைத்தியசாலை, புதூர், திமிலைதீவு, உள்ளிட்ட மக்களின் பிரதான போக்குவரத்து பாதையாகக் காணப்படும், மிக அண்மையில் காபேற் போடப்பட்ட வாவிக்கரை வீதியை எந்தவித முன் அறிவித்தலோ மக்களுக்கான தெளிவு படுத்தலோ இல்லாது தாண்தோன்றித்தனமாக மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை கல்வெட்டுக்காக 8 தொடக்கம் 10 அடி ஆழமான குளியினை வீதிக்கு குறுக்கே வெட்டியுள்ளார்கள்.
இவ்வாறு குளி வெட்டப்பட்டு இருவாரங்களாகியும் இதுவரை எந்த வேலையும் மேற்கொள்ளாது மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை அசமந்த போக்குடன் உள்ளது.
மக்களின் போக்குவரத்திற்கு தடையாக குறுக்காக வெட்டப்பட்டுள்ள இவ்வீதியில் இதுவரை வயோதிப பெண்கள், பாடசாலை மாணவர்கள், நோயாளிகள், என 10 இற்கு மேற்பட்டோர் விழுந்து பாதிக்கப் பட்டுள்ளனர்.
சாக்கடைகள் நிரம்பிய நீர் இங்கு இக்குளியில் தேங்கி நிற்பதால் தொற்று நோய் பெருகும் அபாயம் உள்ளதோடு, முறையான வீதித்தடை, அறிவிப்புக்கள் இல்லாமையாலும், போக்குவரத்து, மேற்கொள்ளும் மக்களுக்கு உயிராபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குச் செல்லும் பிரதான வீதியான வாவிக்கரை வீதி கடந்த இரண்டு வாரங்களாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் கல்வெட்டு அமைப்பதாக கூறி வீதியை முற்று முழுதாக 8 அடி பள்ளம் வரை தோண்டப்பட்டு பாதைப்போக்குவரத்தினை முற்றாக துண்டித்துள்ளனர்.
இதன் மூலம் அனைத்தப் போக்குவரத்துக்களும் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் எந்த விதமான முன் அறிவித்தலும் இன்றி இப்பாதை துண்டிக்கப்பட்டுள்ளது.
எனச் சுட்டிக்காட்டியுள்ள பிரதி மேயர் யு.ஜோர்ஜ்பிள்ளை இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமறும் பொலிஸாரைக் கோரியுள்ளார்.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4













