கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கைத்தறி,நெசவுத் துணி கண்காட்சி

(சித்தாண்டி நித்தி) கிழக்கு பல்கலைக்கழகத்தில் கைத்தறி நெசவுத் துணிகளின் கண்காட்சி இன்று (29) புதன்கிழமை பல்கலைக்கழக நல்லையா மண்டபத்தில் நடைபெற்றது.

 நடைபெற்ற கண்காட்சிக்கு கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா பிரதம விருந்தினராக கலந்துகொண்டு கண்காட்சியை ஆரம்பித்துவைத்தார். 

அதனைத்தொடர்ந்து இக்கண்காட்சிக்கு பீடாதிபதிகள் மற்றும் விரிவுரையாளர்கள் என பலர் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான கைத்தறி துணிகளை பார்வையிடுவதையும் கொள்வனவு செய்வதையும் படங்களில் காணலாம்.
   
மட்டக்களப்பில் சமூகப் பண்பாட்டு வரலாறுகள் பன்மைத் தன்மை வாய்ந்தன. இயற்கை வளங்களை ஆதாரமாகக் கொண்ட பல்வேறு உள்ளுர்தொழிற்துறைகளின் விளை நிலமாகவும் மட்டக்களப்பு இருந்து வருகிறது.

உள்ளுர் சமூகப் பண்பாடுகள் கலைத்தொழில் முனைவினை வலுப்படுத்தும் முகமாக கைத்தொழில் முன்னேற்றம் இக்கண்காட்சியும் அறிமுகமும் உள்ளுர் கைத்தறி, நெசவுத் துணிகளில் இருந்து பல்வகைப்பட்ட பண்பாட்டுப் பொருட்கள் என ஆக்கங்களும் கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் ஏற்பாட்டிலும் , வழிப்படுத்தலிலும் திருமதி . நிலுஜா ஜெகநாதன், சி . ஜான்சி ஆகியோரின் உருவாக்கங்களும் காட்சிப்படுத்தலுக்கு வருகின்றன.  
உள்ளுர் கைத்தறி நெசவுப் பயன்பாட்டு பண்பாட்டை வலுப்படுத்தும் நோக்கமுடையதாக இந்த முன்னெடுப்பு அமைகிறது. 

கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் விரிவுரையாளர்கள், மாணவர்கள் போன்றோர்களால் உள்ளுர் கைத்தறி நெசவும் பயன்படும் புத்தாக்கச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த முன்னெடுப்பின் இணைப்பாளராக சி.ஜெய்சங்கர் இயங்கி வருகிறார். கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறைத் தலைவர் வ.இன்பமோகன் தலைமையில் கிழக்குப்பல்கலைக்கழக நல்லையா பிரதான மண்டபத்தில் 29.10.2014 இன்று புதன்கிழமை 9.30 மணியளவில் உள்ளுர் கைத்தறி நெசவுத் துணிகளால் ஆக்கப்பட்ட கலைப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

உழைப்பு உருவாக்கம் உள்ளுர் உற்பத்தி என பல்தரப்பட்டவரின் சமூகங்களும் திறன்கள் மற்றும்  படைப்பாற்றல்களின் வெளிப்பாடுகள்  மேற்படி தொழில்துறைகளில் வெளிப்பட்டு நிற்பவை. இந்தவகையில் கைத்தறி நெசவும் மட்டக்களப்பிற்கு பெயரைப் பெற்றத் தந்திருக்கிறது. 

அத்தோடு மட்டக்களப்பிலே இன்றளவும் கைத்தறி நெசவிற்கான பாடசாலையும் அது தொடர்பான திணைக்களமும் ,விற்பனை நிலையமும் காணப்படுவது கண்கூடு. இக காட்சிப்படுத்தலிலும்; கைத்தறி நெசவுத் திணைக்களத்தின் விற்பனையும் இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது.