வண பிதா வெபர் ஞாபகார்த்த கால்ப்பந்தாட்டப் போட்டி ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி அணி அரையிறுதிக்குத் தகுதி



மட்டக்களப்பு கால்ப்பந்தாட்டச் சங்கத்தினால் மைக்கல் மேன் விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையுடன் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடத்தப்பட்டு வரும் ஏ பிரிவு கழகங்களுக்கிடையிலான வண பிதா வெபர் ஞாபகார்த்த கால்ப்பந்தாட்டச் சுற்றுப் போட்டிகளில் இன்றைய தினம் (13.10.2014) நடைபெற்ற ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி அணிக்கும் இக்னேசியஸ்; அணிக்கும் இடையிலான காலிறுதிப் போட்டியில் 4.2 எனும் பேறுகளினடிப்படையில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி அணி இக்னேசியஸ்; அணியை வெற்றி கொண்டு அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.

அரையிறுதிப் போட்டிகள் பற்றிய செய்திகள் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது