மட்டு நகரில் வண பிதா வெபர் ஞாபகார்த்த கால்ப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி ஆரம்பம்


மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்டச் சங்கத்தினால் மட்டக்களப்பு மைக்கல் மேன் விளையாட்டுக் கழகத்தின் ஆதரவுடன் நடத்தப்படும் ஏ பிரிவு கழகங்களுக்கிடையிலான நொக்கவுட் முறையிலமைந்த கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டி இன்று (08.10.2014) மாலை 4.30 மணியளவில் மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது.

எழுபது நிமிடங்கள் மாத்திரம் நடைபெற்ற முதலாவது போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி அணியினரும் மட்டக்களப்பு கதிரொளி அணியினரும் போட்டியிட்டார்கள். இதில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி அணியினர் 5:1 எனும் பேறுகளின் அடிப்படையில் வெற்றி பெற்றுக் கொண்டார்கள்.


நாளைய தினம் (09.10.2014) மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் பிற்பகல் 4.00 மணிக்கு யங்ஸ்டார் அணியினருக்கும் கடல்மீன்கள் அணியினருக்கும் இடையிலான போட்டி நடைபெறவுள்ளதாக கால்பந்தாட்டச் சங்க செயலாளர் தே.காந்தன் வெற்றி நியுஸிற்கு அறிவித்துள்ளார்.