(சித்தாண்டி நித்தி) அகில இலங்கை ரீதியாக தமிழ் நாடக சங்கத்தினால் நடத்தப்பட்ட நாடக விழாவில் வந்தாறுமூலை விஷ்ணு மகாவித்தியாலயத்தில் இருந்து கலந்துகொண்ட செல்வி ரஷிதா ரவிந்திரன் என்ற மாணவி சாதனை படைத்துள்ளார்.
கொழும்பு றோயல் கல்லூரியில் நடத்தப்பட்ட நாடக விழாவில் கீழ்பிரிவில் சிறந்த தனி நடிப்பிற்கான முதலாம் இடத்தினைப் பெற்று இச்சாதனையை தமது பாடசாலைக்கு பெற்றுக்கொடுத்துள்ளார். நடைபெற்ற போட்டியில் மாகாணங்களிலிருந்து பல பாடசாலைகள் வருகைதந்து இப்போட்டியில் கலந்துகொண்டபோதும் விஷ்ணு மகாவித்தியாலயத்திற்கு முதலிடம் கிடைத்தன.
நடைபெற்ற நாடக விழாவிற்கு விஷ்ணு மகாவித்தியாலயத்தில் இருந்து பல்வேறு பிரிவுகளில் நாடகங்கள் தெரிவுசெய்யபட்டு மேடையேற்றப்பட்டதுடன் அவர்களுக்கான விருதுகளையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


.jpg)










