(நித்தி) சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயு சுவாமி ஆலயத்தில் ஐந்தாவது நாளாக கந்த சஷ்டி விரதம் மிகவும் சிறப்பான முறையில் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.
கடந்த 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிய கந்த சஷ்டி விரதம் மிகவும் சிறிப்பான முறையில் நடைபெற்றுவருகின்றது.
மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கில் சித்தாண்டி முருகன் ஆலயத்திற்கு விரதம் அனுஸ்டிக்க வருகை தந்திருப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது.
நடைபெற்றுக்கொண்டிருக்கும் கந்தசஸ்டி விரத்தின் ஐந்தாம் நாளாகிய இன்று சூரபத்மன் தனது சேனையுடன் ஊர்வலம் வருவது வழமை அந்தவகையில் சித்தாண்டி மற்றும் அண்மித்த கிராமம், ஆலயங்களுடாக சூரபத்மன் நகர்வலம் வந்து மக்களுக்கு காட்சிகொடுத்தார்.
இன்று நகர்வலம் சென்ற சூரன் நாளை ஆறாம்(6) நாள் முருகப்பெருமானுடன் சுமார் பிற்பகல் 3.00 மணியளவில் போருக்கு தயராகின்றார்.
நாளை (29) புதன்கிழமை நடைபெறவிருக்கும் சூரன்போரை கண்டுகழிப்பதற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் வருவதுவழமை, மக்களின் வருகையினை முன்னிட்டு ஆலய நிருவாகத்தினரால் பாதுகாப்பு ஒழுங்கு நடைமுறைகள் மற்றும் கலை நிகழ்வுகளும் சிறப்பான முறையிலே ஒழுங்குசெய்யப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது.


.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)










