மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உற்பத்தித் திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பஷீர் சேகுதாவூத், மாவட்ட திட்டமிடல் பணிப்பளார் ஆர்.நெடுஞ்செழியன், மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் விவசாயம், கடற்றெழில், கால்நடை, திவிநெகும திணைக்கள பணிப்பளார்கள், வேள்ட் விஷன், முஸ்லிம் எயிட் போன்ற அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 345 கிராம சேவையாளர் பிரிவுகளில் தெரிவுசெய்யபப்ட்ட 17210 குடும்பங்களுக்கு 115.6 மில்லின் ரூபா பெருமதியான பல்வேறுவிதமான நலன் திட்டங்கள் வழங்கபட்டன.
இந்நிகழ்வில் வேள்ட் விஷன் மற்றும் முஸ்லிம் எயிட் நிறுவனங்களினால் விவசாய பயிர்கள் பொருட்கள், கறவைப் பசுக்கள், கோழிக் குஞ்சுகள், ஆடுகள், கடற்றொழில் உபகரணங்கள் என்பன இந்நிகழ்வில் பயனாளிகளிடம் கையளிக்கபட்டன.





















