(சித்தாண்டி நித்தி) உலக கை கழுவும் தினத்தினை முன்னிட்டு ஏறாவூர்பற்று-2 கல்விக் கோட்டத்திலுள்ள ஒருமுழச்சோலை ஸ்ரீ சித்தி விநாயர் வித்தியாலயத்தில் கைகழுவும் தின நிகழ்வு இன்று (15) புதன்கிழமை அதிபர் திரு.வே.ராஜேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஏறாவூர் பற்று–2 கல்விக் கோட்டத்தின் கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு பொ. சிவகுரு அவர்களும், சிறப்பு அதிதியாக பிரதேச பொதுச் சுகாதார உத்தியோகத்தர் திரு.து.ஜெயனிக்காந் அவர்களும் கலந்து கொண்டனர்.
பாடசாலை அதிபரின் தலைமை உரையினைத் தொடர்ந்து, நிகழ்வில் கலந்து கொண்ட சுகாதார பரிசோதகர் கைகழுவுவதன் நோக்கம், கழுவும் முறை, அதன் தாற்பரியம் தொடர்பாக மாணவர்களுக்கு விளக்கமளித்ததுடன், அதன்முறைகள் பற்றி சிறப்பான முறையில் செய்து காட்டி விளக்கமளித்தார். அதனைத் தொடர்ந்து உரையாற்றிய கோட்டக்கல்விப் பணிப்பாளர் கைகழுவும் நிகழ்வின் ஆரம்பம், அதனை வருடம் தோறும் அனுட்டிப்பதன் நோக்கம், முறையாக மேற்கொள்ளாமையினால் ஏற்படும் பாதிப்பு தொடர்பாக விரிவான முறையில் விளக்கமளித்தார்.
எமது பாடசாலை மாணவர் செல்வங்களின் எதிர்கால ஆரோக்கியமான வாழ்வை வளப்படுத்தும் முகமாக 2014 ஆம் ஆண்டு எங்களின் விழிப்புணர்வூட்டும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளோம் எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் கைகளினால் பரவக்கூடிய நோய்களை குறைத்துக்காட்டுவோம் என்கின்ற தொனிப்பொருளில் இச் செயற்பாடு நடைபெறுவதாக பாடசாலையின் சுகாதாரக் கழகப் பொறுப்பாசிரியர் திரு கோ.ஜீவாகரன் ஆசிரியர் மாணவர் மத்தியில் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து சுகாதாரக் கழக மாணவர்களுக்கு மேலங்கி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றதுடன் நிகழ்வில் பாடசாலையின் சுகாதாரக் கழகப் பொறுப்பாசிரியர் திரு கோ.ஜீவாகரன் ஆசிரியர் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வின் முக்கிய அம்சமான மாணவர்கள் அனைவரும் கை கழுவும் நிகழ்வு நடைபெற்றது.

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)