சிறுபாண்மை இனங்களைச் சீரழிக்க மேற்குலகம் கங்கணம் கட்டி நிற்கின்றது இதன் முதற்கட்ட நவடிகையே புலிகள் மீதான தடை நீக்கம் ஸ்ரீ,சு.க.அமைப்பாளர் சந்திரபால


சிறுபாண்மை இனங்களைச் சீரழிக்க மேற்குலகம் கங்கணம் கட்டி நிற்கின்றது அதற்கான ஒரு ஆரம்பமே ஐரோப்பாவில் புலிகள் இயக்கத்தின் மீதான தடை நீக்கம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடாத் தொகுதி அமைப்பாளர் டி.எம். சந்திரபால தெரிவித்தார்.

ஐரோப்பிய நாடுகள் ஊதுகின்ற மகுடிக்கெல்லாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நடனமாடி தமிழ் மக்களின் வாழ்வைச் சீரழிப்பதை கைவிடவேண்டும் என்றும் அவர் கூறினார்

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கல்குடாத் தொகுதியின் சுங்கான்கேணிப் பிரதேசத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளை ஸ்தாபிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்வில்; 100 குடும்பங்களுக்கு தலா ஐந்து தென்னங்கன்றுகள் இலவசமாக விநியோகிக்கப்பட்துடன் கல்குடாத் தொகுதியின் சுங்காங்கேணிப் பிரதேசத்திற்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக் கிளையும் ஸ்தாபிக்கப்பட்டது.

சுங்காங்கேணி கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் சிவலிங்கம் உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்

“சீரழிக்கப்பட்டபோது இந்த மேற்குலகம் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருந்தது அதனால்தான் அர்த்தமற்ற யுத்தத்த்pல் பல்லாயிரக் கணக்கானோர் உயிரிழந்தும் மேலும் பல்லாயிரக் கணக்கானோர் விதவைகளாகியும் அங்கவீனம் அடைந்தும், வீடு வாசல்களை இழந்தும் அகதிகளாகியும் அல்லோல கல்லோலப்பட்டார்கள் இதனையிட்டு மேற்குலகம் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் இருந்து விட்டு இப்பொழுது எல்லாம் நடந்து முடிந்த பின்னர்தான் முதலைக் கண்ணீர் விடுகின்றது.

இப்பொழுது துப்பாக்கிச் சத்தங்கள் ஓய்ந்து விட்ட நிலையில் கிடைத்ததை உண்டு உடுத்து மக்கள் மரநிழல்களின் கீழ் என்றாலும் நிம்மதியாக இருக்கின்றார்கள்.

தொழிலுக்குச் செல்பவர்களையும், பள்ளிக்கூடங்களுக்குச் சென்ற பிள்ளைகளையும், சந்தைக்குபர் போனவர்களையும் தேட வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் அவர்கள் துப்பாக்கிச் சூடு இல்லாதபடியால் அவர்கள் எல்லோரும்  உயிருடன் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

உயிர்ப்பயமும் உயிர்ப் பலியும் இல்லாத நிம்மதியான ஒரு வாழ்க்கை இப்பொழுது இருக்கின்றது. இதனைச் சீரழித்து சிறுபான்மை இனங்களை மீண்டும் யுத்தத்திற்குப் பலிக்கடாவாக்க மேற்குலகம் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு திரிகின்றது.

அதன் ஓர் ஆரம்பம்தான் ஐரோப்பாவில் புலிகள் இயக்கம் மீது இருந்து வந்த தடையை நீக்கியது. ஊலகில் எப்பாகத்திலும் அமைதி நிலவினால் அது மேற்குலகத்திற்குப் பிடிக்காது. இப்பொழுது மேற்குலகம் தங்களது ஆயுதங்களை விற்க வழி தேடுகிறது. ஆதற்கு மிகப் பொருத்தமான வழிமுறைதான் ஐரோப்பாவில் புலிகள் மீதான தடை நீக்கம்.

இதனையிட்டு சிறுபான்மை இனங்கள் எச்சரிக்கையுடன் இருந்து கொள்ள வேண்டும். குறிப்பாக புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தங்களது இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்காக கடந்த 30 வருட யுத்தத்தில் எல்லாவற்றையுமே இழந்து இங்கு மர நிழல்களின் கீழ் அந்தரித்துப் போய் வாழும் அப்பாவித் தமிழ் மக்களை மீண்டும் அகதிகளாக்க முயற்சிக்கக் கூடாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மேற்குலகின் மகுடிக்கெல்லாம் ஆடி தமிழ் மக்களின் வாழ்வைச் சீரழிக்கக் கூடாது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஆற அமரச் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். தற்பொழுது இருக்கின்ற அமைதியும் எதிர்கால இளஞ் சமுதாயத்தின் உயிர்ப் பலிகளையும் தவிர்ப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே வாக்களிக்க வேண்டும்.” என்றார்.