மட்டக்களப்பு கால்ப்பந்தாட்டச் சங்கத்தினால் மைக்கல் மேன் விளையாட்டுக்
கழகத்தின் அனுசரணையுடன் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடத்தப்பட்டு வரும் ஏ
பிரிவு கழகங்களுக்கிடையிலான வண பிதா வெபர் ஞாபகார்த்த கால்ப்பந்தாட்டச்
சுற்றுப் போட்டிகளில் இன்றைய தினம் (11.10.2014) நடைபெற்ற கோல்ட் பிஸ்
அணிக்கும் மைக்கல் மேன் அணிக்கும் இடையிலான காலிறுதிப் போட்டியில் 4.0
எனும் பேறுகளினடிப்படையில் கோல்ட் பிஸ் அணி மைக்கல் மேன் அணியை வெற்றி
கொண்டு அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.
நாளைய தினம் (12.10.2014) காலை 9.30 இற்கு டிஸ்கோ அணிக்கும் கோட்டைமுனை அணிக்கும் இடையிலான போட்டியும், பிற்பகல் 3.30 இற்கு யங்ஸ்டார் அணிக்கும் பாடுமீன் அணிக்கும் இடையிலான போட்டியும் நடைபெறவுள்ளதாக கால்பந்தாட்டச் சங்க செயலாளர் தே.காந்தன் வெற்றி நியுஸிற்கு அறிவித்துள்ளார்.