கொக்கட்டிச்சோலை பாடசாலையில் ஆசிரியர் தின நிகழ்வு

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மேற்கு வலயத்திற்குட்பட்ட கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ணமிசன் வித்தியாலயத்தில் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஆசிரியர் தின நிகழ்வு இன்று(16) வியாழக்கிழமை வித்தியாலய மண்டபத்தில் மிகச்சிறப்பாக இடம்பெற்றது.
இதன் போது ஆசிரிர்களுக்கு மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டு அவர்களுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டது.