பெரியபோரதீவு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் தீ மிதிப்பு.

(சக்தி)  கிழக்கில் பிரசித்திபெற்ற மட்டக்களப்பு – பெரியபோரதீவு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் வருடாந்த உற்சவப் பெருவிழாவின் இறுதி நாளான இன்று புதன் கிழமை (08) தீ மிதிப்பு இடம்பெற்றது. இதில் நாட்டின் பல பாகங்களிலுமிருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

ஆலய நிகழ்வுகள், கிரியைகள் யாவும் விஷ்வப் பிரம்ம ஸ்ரீ இ.வை.காந்தன் குருக்கள் தலைமையில் இடம்பெற்றன.