மட்டக்களப்பு கால்ப்பந்தாட்டச் சங்கத்தினால் மைக்கல் மேன் விளையாட்டுக்
கழகத்தின் அனுசரணையுடன் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடத்தப்பட்டு வரும் ஏ
பிரிவு கழகங்களுக்கிடையிலான வண பிதா வெபர் ஞாபகார்த்த கால்ப்பந்தாட்டச்
சுற்றுப் போட்டிகளில் இன்றைய தினம் (10.10.2014) நடைபெறவிருந்த முதலாவது
காலிறுதிப் போட்டி (டிஸ்கோ எதிர் கோட்டைமுனை) மட்டுநகரில் பொழிந்த
மழையினால் மைதானத்தில்; ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பிற்போடப்பட்டுள்ளதுடன்,
இப்போட்டி எதிர்வரும் 12.10.2014 ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30
இற்கு நடைபெறும் எனவும்,
நாளைய தினம் (11.10.2014) இரண்டாவது காலிறுதிப் போட்டியில் கோல்ட் பிஸ் அணியினரும் மைக்கல் மேன் அணியினரும் பி.ப 3.30 மணிக்கு கலந்து கொள்ளவுள்ளனர் என்றும் கால்பந்தாட்டச் சங்க செயலாளர் தே.காந்தன் வெற்றி நியுஸிற்கு அறிவித்துள்ளார்.