மட்டக்களப்பு கல்லடி இராமகிருஷ்ணமிசன் பிள்ளைகளுக்கான தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு.


(ஜெயா)
வறியமக்களுக்கு அளப்பரிய கல்விச் சேவைகளையும், இந்து மதத்தின் செயல்பாட்டையும் பல வருடகாலமாக முன்னெடுத்துச் செல்லும் மட்டக்களப்பு கல்லடி இராமகிருஷ்ணமிசன், அங்கு தங்கி கல்வி பயிலும் க.பொ.த (சா.ம்) மற்றும் உயர்தர மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு நடாத்தப்பட்டது. இதில் இராமகிருஷ்ணமிசன் சுவாமி.'ஜாணந்தா தலைமையில் வாழ்த்துரையாற்றப்பட்டதுடன், தொழில் வழிகாட்டல் கருத்தரங்கினை மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியின் பிரதி அதிபர் ச.தியாகராசா அவர்களினால் நடாத்தப்பட்டது.

இதன் போது மாணவர்கள் தங்கள் எதிர்கால வாழ்க்கையினை அமைத்துக் கொள்வதற்கு முதலில் திறமை காணப்பட்டாலும், சரியான வழிகாட்டல் அவசியம் என்றும் இதற்கு முதலில் பாடத்தெரிவினை மேற்கொள்ள வேண்டும் என்றும், இப் பாடத் தெரிவானது Z புள்ளியினை அதிகரிக்கக்கூடிய பாடங்களை தெரிவு செய்து, கூடிய Z புள்ளியினை எடுத்து பல்கலைக்கழகம் நுழைய முடியும். அவ்வாறு சில நேரம் Zபுள்ளி போதாத நிலையில் கவலைப்படத் தேவையில்லை தொழில் நுட்பக் கல்வி மூலம் உங்கள் பட்டங்களை இலகுவில் பெற்று அதிகூடிய வேதனுத்துடனான தொழில்வாய்ப்பினை உடனடியாகப் பெற்றுக் கொள்ள முடியும். இதற்கு மட்டக்களப்பு தொழில்நுட்பக்கல்லூரிக்கு விஐயம் செய்யுங்கள் என்று தெரிவித்தார். இன் நிகழ்வினை பிரசீன் ஒழுங்கமைத்து வழங்கினார்.