பெரியபோரதீவு பாரதிவித்தியாலயத்தில் பாடசாலைஅனர்த்தக் குறைப்பு செயற்றிட்டம்

வெல்லாவெளிப் பிரதேசசெயலாளர்பிரிவில் ஐரோப்பிய ஆணையத்தின்  நிதியுதவியில் அனர்த்த முகாமைத்துவ மையத்துடன் இணைந்து அக்ரெட்  நிறுவனத்தால் 03 கிராமசேவகர் பிரிவில் கண்டிக்கப் இன்ரநெசனல், ஒக்ஸ்பாம், சேவ்த சில்ரன்  இணைந்துநடைமுறைப் படுத்தப்படும் அனர்த்த முகாமைத்துவத் திட்டத்தின் (DIPECHO VII) பாடசாலைஅனர்த்தக் குறைப்புச் செயற்றிட்டத் சேவ்த சில்ரன் அமைப்பு நடைமுறைப்படுத்தி வருகின்றது.


அதன் ஒருஅங்கமாக நேற்று (20) பெரியபோரதீவு பாரதிவித்தியாலயத்தில் சர்வதேச அனர்த்தகுறைப்புதினம் அனுஷ்ட்டிக்கப் பட்டது.

அதிபரின் தலைமையில் இந்நிகழ்வில் கல்வி அதிகாரிகளும் ,அக்ரெட் உத்தியோகத்தர் இ.ஹஜேந்திரன், சேவ்த சில்ரன்  உத்தியோகஸ்த்தர் ஜ.யெஜராணி, கிராமமட்ட அனர்த்தமுகாமைத்துவக் குழு உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் கலந்துகொண்டனர்.

இதில் மாணவர்களின் அனர்த்தக் குறைப்புச் செயற்பாட்டுநிகழ்வுகள் மற்றும் ஊர்வலமும் இடம்பெற்றது.