வாசிப்பு மாதத்தினையொட்டி செட்டியாளையத்தில் ஓவியக் கண்காட்சி

(எம்.ஏ.றமீஸ்)

தேசிய வாசிப்பு மாதத்தினையொட்டி செட்டியாளையம் பொது நூலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஓவியக் கண்காட்சி நூலக உதவியாளர் மலர்மதி சசிகுமார் தலைமையில் ​நேற்று 28ம் திகதி நூலக வளாகத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு சுவாமி விபுலானந்த அழகியற் கற்கை நிறுவகத்தின் விரிவுரையாளர் வி.கோகுலரமணனின் கைவண்ணத்தில் உருவான ஓவியக் கண்காட்சியினை பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரத்தினம், உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல், பிரதேச சபை செயலாளர் யாகேஸ்வரி வசந்தகுமார், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் கே.எம்.புவிதரன் உள்ளிட்ட அதிதிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பொது மக்கள் என பலர் பார்வையிட்டனர்.

இதன்போது ஓவியக் கலையில் பல்வேறு சாதனைகள் படைத்து வரும் மட்டக்களப்பு சுவாமி விபுலானந்த அழகியற் கற்கை நிறுவகத்தின் விரிவுரையாளர் வி.கோகுலரமணனின் திறமையைப் பாராட்டி நிகழ்வின் பிரதம அதிதி பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரத்தினம் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.

இந்நிகழ்வின்போது செட்டிபாளையம் மகா வித்தியாலய மாணவர்கள் மற்றும் சிவன் முன்பள்ளி நிலைய மாணவர்கள் போன்றோரின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.