குரு பிரதீபா பிரபா விருதை இரண்டாவது தடவையும் பெற்றார் பிரபாகரன்

( ரவிப்ரியா )
கண்ணகிபுரம் விநாயகர் வித்தியாலய முதல்வரும்; எழுத்தாளரும் ஆய்வாளருமான க.பிரபாகரன் கடந்த ஆண்டும் இவ்வாண்டும் தொடர்ச்சியாக இருவருடங்;கள் (2013,2014); குரு பரதீபா பிரபா விருதைப் பெற்றுக் கொண்டதை பாராட்டும் வகையில் வெள்ளியன்று பாடசாலையில், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினால் பாராட்டு விழா நடாத்தப்பட்டது. அத்துடன் 2013ல் இதே விருதைப் பெற்ற ஆசிரியை  இரத்தினேஸ்வரியும் கௌரவிக்கப்பட்டார்.
ஏற்பாட்டுக் குழு தலைவர் உதயசூரியன் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில் பிரதம அதிதியாக பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி க.புள்ளநாயகமும், அதி விசேட அதிதியாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி கு.சுகுணன் ஆகியோரும,; விசேட அதிகளாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் பே.காப்தீன் கோட்டக்கல்விப் பணிப்பாளர் வி.திரவியராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதிதிகள் அனைவருமே தங்கள் உரைகளில் அதிபர் பிரபாகரன் விருதுக்கு முற்றிலும் பொருத்தமானவர் என்பதை ஏகோபித்த குரலில் தெரிவித்தனர். முரண்பாடுகள் அற்ற முகாமைத்துவமே அவருடைய வெற்றிகளுக்கு அடிப்படையாக அமைகின்றது என்ற தங்களின் அபிப்பிராயத்தையும் வெளியிட்டனர்.

விருதாளி பிரபாகரன் தனதுரையில், கடந்த வருட பாராட்டு விழாவை தவிர்த்தேன். கல்விச் சமூகத்தின் ஒட்டு மொத்த அன்பிற்கு அடிபணிந்து இந்த விழாவில் கலந்து கொண்டேன். சுகமான சுமையாக ஏற்றே, ஆசிரியர்களை எனது குடும்பத்தவர்களாகவே நினைத்து மதித்துச் செயற்பட்டதால் பாடசாலையை என்னால் துரிதமாக அபிவிருத்தி செய்ய முடிந்தது. அப்துல் கலாம் கூறியதுபோல் எமது பாடசாலை மாணவர்களும் உயர்வான கனவு கண்டு உயர வேண்டும். அதன் மூலம் சமூகத்தை மேம்படுத்த வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.