மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட வேப்பவெட்டுவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்விபயிலும் மாணவன் இவ் வருடம் தரம் 5 புலமப் பரிசில் பரீட்சைக்கு தோற்றி கோட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.மேற்படி வேப்பவெட்டுவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்விபயிலும் மாணவனான ராஜீ வினுஜன் எனும் மாணவனே ஏறாவூர் பற்று மேற்கு கோட்டத்தில் 174 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
கடந்த 19 வருடங்களின் பின் இவ் வருடம் இம் மாணவனே தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.
சித்தியடைந்த மாணவனையும் பாடசாலை அதிபர் மற்றும் கற்பித்த ஆசிரியர் சி.மோகன்ராஜ் அவர்களையும் பாடசாலை நலன்விரும்பிகளும் பெற்றோர்களும் பாராடினர்.














