செட்டிப்பாளையம் கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு செட்டிப்பாளையம் கடலில் தோணியொன்று உடைந்து சேதமடைந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

இன்று அதிகாலை மூன்று மணியளவில் கடற்கரையிலிருந்து கடலுக்குச் சென்ற தோணி கடும் காற்றினால் உடைந்துள்ளது.
சம்பவத்தில் செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த 56 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சடலம் மீட்கப்பட்டு களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது

காயமடைந்தவரும் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார்.

சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.