நீச்சல் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த கடற்படை வீரர் ஒருவர் நீரில்பலி

சம்பூர் கடற்படை முகாமில் நீச்சல் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த கடற்படை வீரர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்..

மிரிஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 22 வயதான கடற்படை வீரர் ஒருவரே சாம்பூரில் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

நீரில் மூழ்கிய கடற்படை வீரர் மீட்கப்பட்டு மூதூர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோது உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.


உயிரிழந்த கடற்படை வீரரின் சடலம் திருகோணமலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த மரணம் தொடர்பில் சம்பூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.