மட்டக்களப்பு - மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வெற்றிக்கிண்ணம் 2014 மென்பந்து கிறிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதிநாள் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
இந் நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வெ.தவராஜா தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் அவர்களும் சிறப்பு அதிதிகளாக உதவி மாவட்ட செயலாளர் எஸ்.ரங்கநாதன்,மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வீ.ஈஸ்பரன் அவர்களும் சிறப்பு அதிதிகளாக கொமர்சல் கிரடிற் முகாமையாளர்கள் ஏ.கிருஷாந், எம்.மயூரதன், எஸ்.சிவக்காந்தன், Brandix X' Pressions நிறுவன முகாமையாளர் சமிள கொளம்பகே, எல்.ஒ.எல்.சீ. வலய பொறுப்பதிகாரி டாணியல்பாக்கியம் போன்றோரும் கலந்து சிறப்பித்தனர்.
12 அணிகள் பங்குகொண்ட இப் போட்டியில் முதலாம் இடத்தின் வெற்றியினை மண்முனை வடக்கு பிரதேச செயலக அணியினர் பெற்றுக்கொண்டனர். இரண்டாம் இடத்தினை கச்சேரி அணியினரும்,வெல்லாவெளி பிரதேச செயலக அணியினர் மூண்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.
வெற்றிபெற்ற அணிகளுக்கு வெற்றிக் கிண்ணங்களும் பணப்பரிசுகளும் அதிதிகளால் வழங்கிவைக்கப்பட்டது.
இவ் வருடம் ஆரம்பிக்கப்பட்ட "மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வெற்றிக்கிண்ணம்" விளைாட்டு எதிர்வரும் வருடங்களில் "சவால் கிண்ணமாக" மாற்றமடைந்து வருமென பிரதேச செயலாளர் வெ.தவராஜா தெரிவித்தார்.
இந் நிகழ்வுக்கு கொமர்சல் கிரடிட் நிறுவனம் அனுசரணையினை வழங்கியிருந்தது.
இந் நிகழ்வுக்கு கொமர்சல் கிரடிட் நிறுவனம் அனுசரணையினை வழங்கியிருந்தது.













