மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாத் தேர்தல் தொகுதியிலுள்ள 380 கிராமங்களிலும் கவனிப்பாரற்றுக் கிடந்த வீதிகள் செப்பனிடும் பணிகளை கல்குடாத் தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் டி.எம். சந்திரபாலா ஆரம்பித்துவைத்தார்.
ஏறாவூர்ப் பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவில் முதற் கட்டமாக செங்கலடி, கொம்மாதுறை மற்றும் வந்தாறுமூலை ஆகிய கிராமங்களில் பழுதடைந்த வீதிகளை புனரமைக்கப்படவுள்ளன.
மக நெகும எனப்படும் வீதி அபிவிருத்தி உபகரணங்கள் கம்பனியின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்கவின் பணிப்புரைக்கமைவாக கல்குடாத் தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் டி.எம். சந்திரபாலவின் வேண்டுகோளுக்கிங்க மகநெகும கம்பனியிலிருந்து வீதி அபிவிருத்திக்குப் பயன்படுத்தப்படும் 13 பாரிய இயந்திராதிகள் கல்குடாத் தொகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதன்படி மாரிகால அடை மழை தொடங்குவதற்கு முன்னர் கல்குடாத் தொகுதியில் கவனிப்பாரற்றுக் கிடக்கும் 380 கிராமங்களிலுமுள்ள வீதிகள் செப்பனிடப்படவுள்ளன.
வீதிகள் செப்பனிடுவதை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கல்குடாத் தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மத்திய கிளைச் செயலாளர் ஐ. லலீந்திரன், கொம்மாதுறைக் கிளைத் தலைவர் கே. கோவிந்தன், செங்கலடி கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் வி. கணேசநாதன், செங்கலடி விளையாட்டுக் கழகத் தலைவர் சி.எஸ். வடிவேல், மகளிர் அமைப்புச் செயற்பாட்டாளர் யோகேந்திரன் ரமணி உட்பட கிராம மக்களும் கலந்து கொண்டனர்.