(சிவம்)
உலகில் உள்ள சனத்தொகையில் 380 மில்லியன் பேர் நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் மற்றும் 220 மில்லியன் பேர் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளார்கள்.
இவ்வாறு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ஐ. எல். இப்றாலெவ்வை தெரிவித்தார்.
உலக நீரழிவு தினத்தை முன்னிட்டு மக்களிக்கு விழிப்புணர்வூட்டும் பேரணி மட்டக்களப்பு நகரில் இன்று வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்றது.
இதன்போது கலந்து கொண்டு மேலும் அவர் கூறுகையில்
ஆரோக்கியமான வாழ்விற்கு உணவுப்பழக்கவழக்கமே காரணமாகும். காலை ஆகாரம் மிகவும் பிரதானமானது நார்த்தன்மையுள்ள 400 கிராமிற்கு குறையாத மரக்கறி, பழம்,தவிட்டுடன் கூடிய சாதம் ஒவ்வோரு நாளும் உண்ணுதல் வேண்டும்,
எமது உத்தியோகத்தர்கள் இவற்றில் கவனமெடுப்பதில்லை இது அபத்தான நிலைக்கு இட்டுச் செல்லும் ஒரு நாட்டின் அரசனைப் போல் காலை உணவை நாங்கள் உண்ண வேண்டும்.
இலங்கையிலே வயோதிபர்களில் அதிகமானோர் சிறுநீரக நோயினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்கள் சரியான உணவுப்பழக்க வழக்கம் இன்மையால் ஏற்பட்ட நீரழிவு நோயின் செயல்பாடாகும்.
எனவே இக்கொடிய நோயிலிருந்து பாதுகாக்க முன்னேற்றபாடான வளிகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.












