பிரதியமைச்சர் முரளிதரன்-48வது பிறந்த நாளையிட்டு கிரான்குளத்தில் பல்வேறு சமூக பணிகள்

மீள்குயேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூத்தி முரளிதரன் அவர்களின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு கிரான்குளம் கதிரவன் விளையாட்டுக்கழகம் மற்றும் மாதர் அபிவிருத்திச் சங்கம் இணைந்து நாடாத்திய சிரமதானம், அன்னதான நிகழ்வு அத்தோடு மரம் நடுகை போன்ற நிகழ்வுகள் கிரான் குளத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை அமுல்படுத்தி நடைமுறைப்படுத்தி மாவட்டத்தின் பல்வேறு துறைகளில் வளர்ச்சியை ஏற்படுத்த மக்களோடு மக்களாக நின்று அபிவிருத்திகளை ஏற்படுத்தித்தரும் கௌரவ முரளிதன் அவர்களின் பிறந்தநாளை நினைவுகூர்ந்து மிகவும் சிறப்பான முறையிலே கொண்டாடுவதற்காக  இவ் நிகழ்வுகளை கிரான்குளம் கதிரவன் விளையாட்டுக்கழகம் மற்றும் மாதர் அபிவிருத்திச் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

மீள்குடியேற்ற பிரதியமைச்சர் முரளிதனின் பல்வேறுபட்ட செயற்பாடுகளில் தோலோடு தோல் நின்று செயற்பட்டுவரும் கிரான்குளம் கதிரவன் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் அமைச்சருக்கு பிறந்த நாள் வாழ்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்திருந்தனர். 

அமைச்சரின் பிறந்த தினத்தையிட்டு ஜீவானந்தா சிறுவர் இல்ல மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டதுடன் கிரான் குளம் நெசவு கட்டடம் மற்றும் கிராமசேவகர் கட்டட வளாகத்திலும் சிரமதான பணியினையும் அத்துடன் ஆரம்ப பாடசாலையில் பாடசாலை சிறுவர்களினால் மர நடுகையும் இடம்பெற்றன.