தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் புதிய வெட்டுப் புள்ளியினால் மண்முனை வடக்கு கல்விக் கோட்டத்தில் 313 மாணவர்கள் சித்தி


(சிவம்)

மட்டக்களப்பு கல்வி வலையத்திற்குட்பட்ட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து மாவட்டத்திற்கும் மற்றும் கோட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாக கோட்டக்க கல்விப் பணிப்பாளர் அ. சுகுமாரன் தெரிவித்தார்.

2014 ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்டங்களின் வெட்டுப்புள்ளிகள் குறைத்ததிற்கிணங்க இவ் அதிகரிப்பு ஏற்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டின் வரவு செலவு திட்டத்திற்கிணங்க 25,000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தின்கீழ் புதிய வெட்டுப்புள்ளி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 150 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதற்கிணங்க இவ் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வெட்டுப்புள்ளி 157 ஆக அறிவிக்கப்பட்ட நிலையில் 211 மாணவர்கள் சித்தி பெற்றனர். புதிய வெட்டுப் புள்ளியினால் 50 வீத அதிகரிப்பு கிடைக்கப்பபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.