ஜனாதிபதியின் 69வது பிறந்த நாளை முன்னிட்டு கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மர நடுகை நிகழ்வு

(சித்தாண்டி நித்தி) நாட்டின் ஜனாதிபதி அதிமேதகு மகிந்த ராஜபாக்ஷ அவர்களின் 69வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று (18) செவ்வாக்கிழமை கிழக்கு பல்கலைக்கழகத்தில் மர நடுகை வைபவமொன்று பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 

பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற மர நடுகை நிகழ்வில் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்கள், திருகோணமலை பல்கலைக்கழக வளாக நிறைவேற்று அதிகாரி கலாநிதி ரஞ்சித்பிரமலால் டிசில்வா மற்றும் கிழக்கு பல்கலைக்கழக பதிவாளர் திரு.கே.மகேசன் மற்றும் பலர் கலந்துகொண்டதுடன் மர கன்றுகளை நட்டுவைப்பதை படங்களில் காணலாம். 

இன்றைய நாளை நாட்டின் தலைவருக்காக அர்ப்பணித்து நாட்டின் பல்வேறு இடங்களில் ஆலய வழிபாடுகள் மற்றும் அன்னதான நிகழ்வுகள், இரத்த தான நிகழ்வுகள் என சமுகப்பணிகள் இடம்பெற்றாலும் மர நடுகை நிகழ்வானது எதிர்கால நாட்டை பசுமையாக மற்றும் என்பது திண்ணம்.