கட்டடமொன்றின் சுவர் இடிந்ததில் ஒருவர் பலி; மூவர் காயம்

திருகோணமலையில் கட்டடமொன்றின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்து மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

பழைய கட்டடமொன்றை அகற்றுவதற்கு முயற்சித்த சிலர்மீதே வெள்ளிக்கிழமை(31) சுவர் இடிந்து விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.